தமிழகம்

லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து.. காவல் அதிகாரி பரிதாப மரணம்..! கண்ணீரில் குடும்பத்தினர்.!

Summary:

லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து.. காவல் அதிகாரி பரிதாப மரணம்..! கண்ணீரில் குடும்பத்தினர்.!

பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய காவல் அதிகாரி மீது லாரி மோதிய விபத்தில், காவலர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியான சோகம் குடியாத்தத்தில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், சுண்ணாம்புப்பேட்டை உண்டியல் தர்மய்ய நாயுடு தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஆவார். இவரது மகன் பாலாஜி (வயது 36). இவர் கடந்த 2010 ஆம் வருடம் தமிழக காவல்துறையில் பணியாற்ற தொடங்கிய நிலையில், குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். 

சம்பவத்தன்று, குடியாத்தம் சைனக்குண்டா சோதனைச்சாவடியில் பணியை முடித்துவிட்டு, நேற்று காலை இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி வந்துகொண்டு இருந்த காவல் அதிகாரி பாலாஜி, கொட்டமிட்டா கிராமம் அருகே வந்துகொண்டு இருந்தார். அப்போது, ஆந்திரா நோக்கி பயணம் செய்த லாரி, அவரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

 

இதனால் சம்பவ இடத்திலேயே காவல் அதிகாரி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநர் வெங்கடாசலபதி (வயது 36) எனப்வரை கைது செய்தனர். 

விபத்தில் உயிரிழந்த காவல் அதிகாரி பாலாஜிக்கு லாவண்யா என்ற மனைவியும், 3 வயது மகனும், 4 வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement