ஆன்லைன் ரம்மியால் விபரீதம்: கடனாளியாக இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. கண்ணீர் சோகம்.!

ஆன்லைன் ரம்மியால் விபரீதம்: கடனாளியாக இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. கண்ணீர் சோகம்.!


Vellore Gudiyatham Man Died Online Rummy Investment Loan Debt Issue

சம்பாத்தித்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் தொலைத்து, கடன் வாங்கி முதலீடு செய்து பணத்தை இழந்தவர் மர்மமான முறையில் எரிந்தவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கூட நகரம் கிராமத்தை சேர்த்தவர் அசோகா (வயது 32). இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் சம்பாதித்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் போட்டு செலவழித்த நிலையில், அதனை மீட்கிறேன் என்றே பெயரில் கடன் வாங்கியும் முதலீடு செய்துள்ளார். 

இந்நிலையில், ஆன்லைன் ரம்மியில் அடுத்தடுத்து தோல்வி ஏற்பட்டு பணத்தை இழந்துவிட, கடன் கொடுத்தவர்களை கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் அசோகா மனவிரக்தியுடன் இருந்து வந்துள்ளார். கடனை திரும்பி கேட்டு வந்த தொந்தரவுகள் அவரை விபரீத எண்ணத்திற்கு தள்ளியுள்ளது.

vellore

இதனையடுத்து, கூடநகரம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது. அவரின் சடலம் அரைகுறையாக எரிந்த நிலையில் கிடைக்க, காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். 

அப்போது, அசோகா ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்ததும், அதனால் கடனாளி ஆனதும் தெரியவந்தது. மேலும், பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கையில் கடன் தொல்லையால் மகன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.