வேலூர் மாவட்டம் பெண் மருத்துவர் பாலியல் புகாரில் அலட்சியம் காட்டிய ஏட்டு.! வேலூர் மாவட்ட எஸ்.பி. எடுத்த அதிரடி நடவடிக்கை.!



vellore doctor complaint case

வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் தனியார்  மருத்துவமனையில் பணியாற்றும் பீகாரை சேர்ந்த பெண் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்கச் சென்றனர். இதனையடுத்து படம் முடிந்து இரவு 12.30 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர்.  

அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்துள்ளது. ஏற்கனவே அந்த ஆட்டோவில் சில நபர்கள் இருந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் இது சேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார். இதனை கேட்டதும்  இருவரும் ஆட்டோவில் ஏறினர். இதனையடுத்து வேகமாக சென்ற ஆட்டோ அப்பகுதியின் பாலாற்றின் கரைக்கு சென்றது.

அங்கு செல்லும் வரை ஆட்டோவில் அமைதியாக இருந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டத் தொடங்கினர். பின்னர் பெண் மருத்துவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்களை பறித்தனர்‌. மேலும்  ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்று விட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஆன்லைன் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரியும் ஜெயகரன் என்பவர், பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவில்லை என்றும், பணியில் அலட்சியமாக இருந்ததற்காவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் தனிப்பிரிவு ஏட்டு ஜெயகரனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.