தமிழகம்

இடித்துவிட்டு நிற்காமல் சென்ற கார்.. துரத்தி பிடித்தபோது காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

பொதுமக்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் சோதனை செய்தபோது பெரும் அதிர்ச்சி கா

பொதுமக்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் சோதனை செய்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் கார் ஒன்று பயங்கர வேகமாக சென்றுள்ளது. வேகமாக சென்ற கார் அந்த பகுதியில் அமைந்துள்ள பாஞ்சர் கடை ஒன்றில், சைக்கிளுக்கு பஞ்சர் பார்த்துக்கொண்டிருந்த வசீம் என்ற இளைஞர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது.

இதனை அடுத்து அங்கிருந்த மக்கள் காரை துரத்திச்சென்றபோது, அந்த கார் 4 கம்பம் தெருவில் பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் பதற்றமடைந்தநிலையில், அந்த கார் சிறிது தூரத்தில் டயர் வெடித்து ரு பெட்டிக்கடையில் மோதி, பின்னர் அதேபகுதியில் உள்ள மரத்தில்மோதி நின்றது.

இதனிடையே காரை துரத்திச்சென்ற மக்கள் காரில் இருந்த நபரை பிடித்து, அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது அவர் போதை மயக்கத்திலிருந்தார். மேலும் அந்த பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் காரை ஓட்டிவந்த இளைஞர் பேரணாம்பட்டு டவுன் லால் மசூதி தெருவை சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவருடைய மகன் இம்ரான் அஜீஸ் (38) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து அந்த நபர் ஓட்டிவந்த காரை சோதனை செய்தபோதுதான் போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.

ஆம், அந்த இளைஞர் ஓட்டிவந்த காரில் 2 துப்பாக்கிகள், ஒரு கத்தி, ஒரு வாள், 4 செல்போன்கள், வெடிகுண்டு போன்ற ஒரு பொருள், விதவிதமான நம்பர் பிளேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் பி டி.வி.9 என்ற பெயரில் வேலூர் மாவட்ட பத்திரிகையாளருக்கான அடையாள அட்டையும் இருந்துள்ளது.

இதனால் அந்த இளைஞர் மீது மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த இளைஞருக்கு ஏதேனும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என விசாரித்துவருகின்றனர்.


Advertisement