வரவேற்பு முடிந்ததும் மணமகன் தலையில் இடியை இறக்கிய மணப்பெண்.. நடந்த பரபரப்பு சம்பவம்.!

வரவேற்பு முடிந்ததும் மணமகன் தலையில் இடியை இறக்கிய மணப்பெண்.. நடந்த பரபரப்பு சம்பவம்.!


Vellore Anaikattu Bride Girl Stops Marriage Before Marriage One Day Reception is Complete

திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பெண் தனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்று கூறி, திருமணத்தையே நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, பள்ளிகொண்டா குச்சிபாளையம் பகுதியை சார்ந்த வாலிபர், கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள ஊசூர், தெள்ளூர் கிராமத்தை சார்ந்த இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க இருதரப்பு குடும்பத்தினரும் பேசி முடிவு செய்துள்ளனர். 

திருமண ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், பள்ளிகொண்டாவில் இருக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று திருமண தேதி இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பு உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

vellore

வரவேற்பு நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மணப்பெண் தனது பெற்றோரிடம், மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்த சொல்லியுள்ளார். மேலும், மணமகனின் வீட்டாரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்பும் செய்வதறியாது திகைத்த நிலையில், இருதரப்பு பெற்றோர்களும் மணப்பெண்ணை சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனில்லை. 

மேலும், எனக்கு இந்த திருமணத்தில் துளியளவும் விருப்பமில்லை. என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்பினரும் சுமூகமாக பேசி திருமணத்தை அவர்களாகவே நிறுத்திக்கொண்டனர்.