தமிழகம்

தன்னை வேலையிலிருந்து நீக்கிய கம்பெனியை பலி வாங்க இளைஞர் போட்ட மாஸ்டர் பிளான்... கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்...

Summary:

Velaiyirunthu nikiya companyai palivanka young man potta matter plan

டெல்லியில் உள்ள மஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விகேஷ் ஷர்மா. இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மென்பொறியியலாளராக வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது விகேஷ் ஷர்மாவுக்கு அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு இடையே சம்பள தகராறு ஏற்ப்பட்டுள்ளது. அதன் காரணமாக விகேஷ் ஷர்மாவை வேலையிலிருந்து நீக்கியுள்ளது அந்நிறுவனம்.

இதனால் கோபமான விகேஷ் ஷர்மா அந்த நிறுவனத்தை பலி வாங்கியே ஆக வேண்டும் என நினைத்து அருமையான மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதன்படி நிறுவனத்தின் டேட்டா பேஸ்ஸை ஹேக் செய்து டெலிட் செய்தால் மீண்டும் தன்னை வேலைக்கு கூப்பிடுவார்கள் என்று நினைத்துள்ளார்.

ஆனால் அவர் ஹேக் செய்யும்போது எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்டார். பிறகு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி போலீஸில் புகார் அளிக்கவே, விகேஷ் ஷர்மா கைது செய்யப்பட்டார்.


Advertisement