தமிழகம்

உத்தரவை மதிக்காமல் வாகனங்களில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் - அமைச்சர் அதிரடி.!

Summary:

Vehicles will be collected if roaming while 144

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்றில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனவை கட்டுப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளிலையே இருக்கும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், அரசின் உத்தரவை மதிக்காமலும், கொரோனவின் தீவிரம் புரியாமலும் ஒருசிலர் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் ஆங்காங்கே சுற்றிவருகின்றனர்.

போலீசாரும் இவர்களை பிடித்து வினோதமான தண்டனைகளையும் வழங்கிவருகின்றனர். இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி சாலையில் சுற்றுபவர்களின் இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும், விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், கொரோனா மிக கொட்டியது என மக்கள் உணரவேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement