திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட VAO.! இதுதான் காரணமா?? சிக்கிய கடிதத்தால் பேரதிர்ச்சி.!

திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட VAO.! இதுதான் காரணமா?? சிக்கிய கடிதத்தால் பேரதிர்ச்சி.!


VAO commits suicide for stress

சென்னை, மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் 39 வயது நிறைந்த சுவாதி பிரகாஷ். இவர் மருங்காபுரி தாலுகா, தாதனூர் என்ற கிராமம் ஒன்றில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து வசித்து வந்துள்ளார். 

காலை அலுவலகத்திற்கு வரும் நேரம் தாண்டியும் அவர்  வரவில்லை. இந்த நிலையில் சகப்பணியாளர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இந்த நிலையில் சந்தேகமடைந்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது மேலும் டிவி ஓடும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் வெகுநேரமாக கதவை தட்டியும் அவர் அவர் கதவை திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அங்கு சுவாதி பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு கிடந்துள்ளார்.

vao

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கதவை உடைத்து சுவாதி பிரகாஷின் உடலை மீட்டுள்ளனர். மேலும் அங்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில் அவர் தான் துவக்கத்திலிருந்து மன வியாதியால் சிரமப்பட்டதாகவும், அதனால் மது அருந்திவிட்டு யாரையும் மதிக்கவில்லை. மேலும் அதிகளவு கடனும் வாங்கியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.