அரசியல் தமிழகம் சினிமா

வலிமை பட அப்டேட் எப்போது.? பதிலளித்தார் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன்.!

Summary:

தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்க

தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் படக்குழு துவங்கி அயல் நாட்டுக்கு கிரிக்கெட் வீரர், முதலமைச்சர், பிரதமர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். ரசிகர்களின் இத்தகைய செயல்களால் அதிருப்தி அடைந்த நடிகர் அஜித் அவர்களை பொறுமையாக இருக்க கூறி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் ட்விட்டர் பக்கத்தில் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என பதிவிட்டுள்ளார்.


Advertisement