கொரோனா தடுப்பூசி டோக்கனை பறித்து திமுகவினர் அராஜகம்..! முதல்வர் ஸ்டாலின் கருத்தை மதியுங்கள்.! வானதி சீனிவான் அட்வைஸ்.!

கொரோனா தடுப்பூசி டோக்கனை பறித்து திமுகவினர் அராஜகம்..! முதல்வர் ஸ்டாலின் கருத்தை மதியுங்கள்.! வானதி சீனிவான் அட்வைஸ்.!



vanathi-srinivasan-talk-about-dmk

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்திலே கோவை மாவட்டத்தில் அதிகப்படியாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் மட்டும்  2,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோவையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி போடும் மையத்தில் சரவணம்பட்டி திமுக பொறுப்பாளர் ௮ருள்குமார் என்பவர் மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசிக்கான டோக்கனை நான் தான் தருவேன் ௭ன்றும் எங்கே வேண்டுமானாலும்  புகார் கொடுக்கலாம்  ௭ன்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவான் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இம்மாதிரி பல்வேறு இடங்களில் ஆளும்கட்சியினர் தலையீடு அதிகரித்துக்கொண்டுள்ளது . அனைவரும் இணைந்து இக்காலகட்டத்தில் பணியாற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களது  கருத்தை சொந்த கட்சியினர் மதிக்க அறிவுறுத்தவேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.