அரசியல் தமிழகம் இந்தியா

எரியும் தீயில் என்னை ஊற்றுவது போலிருக்கிறது தமிழக அரசின் அறிவிப்பு; வைகோ ஆவேசம்

Summary:

தமிழக அரசு கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்துள்ளதையடுத்து திமுக தொண்டர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மதிமுக தலைவர் வைகோ அளித்த பேட்டியில் "தமிழக அரசின் அறிவிப்பு எரியும் தீயில் என்னை ஊற்றுவது போலிருக்கிறது" என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

தொடர்புடைய படம்

மேலும் அவர் "கலைஞரின் மறைவு எங்கள் எல்லோர் மனத்திலுள்ளும் நீங்கா சோகமாக சூழ்ந்துள்ளது. கலைஞர் பலகோடி தொண்டர்களின் மனதில் குடியிருக்கும் மாபெரும் தலைவர். தோல்வியையே கண்டிராத திமுக தலைவருக்கு அண்ணாவின் நினைவகத்தில்  இடம் ஒதுக்கப்படாதது வேதனை அளிக்கிறது." என்று கூறினார். 

"வேண்டும் வேண்டும்; மெரினாவில் வேண்டும்" என திமுகவினர் கோஷமிட்டபடி உள்ளனர்.

இந்நிலையில் திமுக சார்பில் மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டி நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 


Advertisement