வைகோவை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா.! நலம்பெற வேண்டி வைரமுத்து போட்ட ட்விட்.!vaiko and barathiraja affected by corona

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ  தொடங்கிய கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் கொரோனாவால் ஏராளமானோர் பலியாகினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பாரதிராஜா மற்றும் வைகோ இருவரும் விரைவில் குணமடைய விரும்புவதாக வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், "நோய் என்பது
உடல் தேடிக்கொள்ளும் ஓய்வு. எதிர்ப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளும் உடம்பின் தந்திரம். மனநிலை உடல்நிலை இரண்டுக்கும் சமநிலை காணும் இயற்கையின் ஏற்பாடு. கொரோனா கண்டிருக்கும் அண்ணன் வைகோ இயக்குநர் பாரதிராஜா விரைவில்நலம்பெறவும் வலம்வரவும் வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.