பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்.? நச்சுன்னு பேசிய நடிகர் வடிவேலு.!
நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்ததால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க, படுக்கை வசதி, ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் தடுப்பூசி வாங்குதல் போன்ற கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி செய்யுமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்ததை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை வழங்கினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு கொரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நான் அரசியல் பேசவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே ராம்நாடு, ஒரத்த நாடு என பல உள்ளன. இதில் கொங்கு நாடு அந்த நாடு என ஏன் பேச வேண்டும்? நன்றாகத்தானே இருக்கிறது தமிழ்நாடு அதை ஏன் பிரிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.