திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு: மர்மநபர்கள் அதிர்ச்சி செயல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு: மர்மநபர்கள் அதிர்ச்சி செயல்!


Unknown persons fires election box in thiruvaloor

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஊராட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து 156 ஊராட்சி ஒன்றிங்களில் இன்று காலை 7 மணிக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

பாதுகாப்பை முன்னிட்டு காவலர்கள், ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

Election 2019

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் வாக்குச்சாவடி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டியை வெளியே எடுத்துவந்து அதற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதனை அடுத்து ம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.