10 வருடமாக அடிமைகள் சீரழித்த மின்துறையை மீட்டெடுக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.! உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு
செந்தில் பாலாஜி அ


udhayanithi-stalin-talk-about-eb

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு
செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் மின் விநியோகம்  & பராமரிப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று (29.06.2021) மாலை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், உடன் கழக இளைஞரணி செயலாளரும்,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் லக்கானி இ.ஆ. ப அவர்கள், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திரு.க.செல்வம் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும்,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 10 ஆண்டு காலம் அடிமைகள் சீரழித்த மின்துறையை கடந்த 50 நாட்களாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசு மீட்டெடுத்து வருகிறது என பேசினார்.