கார் மீது டூ-வீலர் மோதி கோர விபத்து.. பள்ளத்தில் உருண்டு., மூதாட்டி பரிதாப பலி.!

கார் மீது டூ-வீலர் மோதி கோர விபத்து.. பள்ளத்தில் உருண்டு., மூதாட்டி பரிதாப பலி.!


two-wheeler-collides-with-car-and-grandmother-dead

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், காரில் பயணித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அம்பாசிடர் கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக எதிரில் வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உருண்டு கவிழ்ந்தது. 

மேலும், இந்த விபத்தில் காரில் பயணித்த கோபிசெட்டிபாளையம் பகுதியினைச் சேர்ந்த மூதாட்டி வள்ளியம்மாள் (வயது 60) என்பவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

erode

மேலும், இந்த விபத்து எவ்வாறு நடந்தது? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் அருகிலிருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக தற்போது விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.