BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"சொந்த அண்ணனே..." கர்ப்பமான 12ஆம் வகுப்பு சிறுமி... காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் உண்மை.!
பொள்ளாச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கர்ப்பமான வழக்கில் அவரது சொந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த மாணவியின் அண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பொள்ளாச்சி சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அந்த மாணவியின் பெற்றோர் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக காவல்துறையால் நடத்தப்பட்ட விசாரணையில் படத்துக்கு அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த மாணவியை அவரது 22 வயதான சகோதரர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.