மக்களே... கவலையை விடுங்க! வங்கி கணக்கில் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500.... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.!!!



tvk-womens-financial-assistance-survey-begins

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அதிக கவனம் பெற்ற மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது வேகமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, 60 வயது வரையிலான பெண்களின் விவரங்களை சேகரிக்கும் கணக்கெடுப்பு பணிகள் பல பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி பெண்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மாதந்தோறும் உதவித்தொகை வழங்க திட்டம்

தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட முதிய பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தவெக விஜய்யின் மகளிர் நல வாக்குறுதிகள்.... பெண்களுக்கு 8 கிராம் தங்கம், அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம்! விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்!!!

பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தவும், குடும்பச் செலவுகளுக்கு ஆதரவாக இருக்கவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தினசரி வருமானத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு இது முக்கிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட பணிகள் தீவிரம்

இதையடுத்து, திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான தரவுகளை சேகரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. பெண்களின் வயது, குடும்ப நிலை மற்றும் பொருளாதார பின்னணி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் ரீதியாகவும் இந்த அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பெண்கள் வாக்குகளை குறிவைத்து கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மகளிர் உதவித்தொகை திட்டம் தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகளை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கின்றனர்.

 

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி.... CM பதவியேற்றதும் விஜய் போடும் முதல் கையெழுத்து..... ஆரம்பவே அமர்களமாகும் அரசியல்!!!