13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
போர்யானை முழங்க.. கண்கவரும் வண்ணத்துடன் தமிழக வெற்றிக் கழகம் கொடியை அறிமுகம் செய்தார் தளபதி விஜய்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யும் அவரது கட்சி நிர்வாகிகளும் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அண்மையில் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களை சந்தித்து அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை,சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். இந்நிலையில் அவர் இன்று பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில் கட்சி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்துள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி பலாத்கார விவகாரம்; தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு.!
இதையும் படிங்க: ஆவின் பால் பண்ணையில் பயங்கரம்; இயந்திரத்தில் முடி சிக்கி, பெண் தலை துண்டித்து பலி.!