ராமநாதபுரம் அருகே கடலில் மிதந்துவந்த 8 மர்ம சாக்கு மூட்டைகள்!! பிரித்து உள்ளே பார்த்தபோது என்ன இருந்தது தெரியுமா?

ராமநாதபுரம் அருகே கடலில் மிதந்துவந்த 8 மர்ம சாக்கு மூட்டைகள்!! பிரித்து உள்ளே பார்த்தபோது என்ன இருந்தது தெரியுமா?


turmeric-bundles-found-on-sea-near-ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடலில் மிதந்துவந்த மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதி கரையோரத்தில் நேற்று அதிகாலை சில மூட்டைகள் கடலில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், கடலில் மிதந்துவந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

அப்போது அந்த மூட்டைகளில் மஞ்சள் இருப்பது தெரியவந்தது. சுமார் 8 மூட்டைகளில் இருந்த 320 கிலோ மஞ்சளை கைப்பற்றிய சுங்கத்துறையினர் அதை அலுவலகம் கொண்டு சென்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இலங்கையில் உள்நாட்டு விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டில் மஞ்சள் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து மஞ்சளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச்செல்கிறது ஒருசில கடத்தல் கும்பல். இவர்கள் மஞ்சளை கடல்வழியாக கடத்திச்சென்றுகொண்டிருக்கும் போது, இடையே இந்திய கடற்படை அல்லது கடலோர காவல் படையினரின் ரோந்து கப்பலை அவர்கள் பார்த்திருக்க கூடும்.

இதனால் மஞ்சள் மூட்டைகளை கடலில் போட்டுவிட்டு அவர்கள் தப்பி சென்றிருக்கலாம். இதனால் கடலில் போடப்பட்ட மஞ்சள் மூட்டைகள் காற்றின் திசை மற்றும் கடல்நீரின் நீரோட்ட வேகத்தால் இங்கு கரை ஒதுங்கி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.