பிறந்தநாளில் வாழ்த்துக்கூறிய நடிகர் தளபதி விஜய்-க்கு நன்றி: டிடிவி தினகரன் அதிரடி.!

பிறந்தநாளில் வாழ்த்துக்கூறிய நடிகர் தளபதி விஜய்-க்கு நன்றி: டிடிவி தினகரன் அதிரடி.!



TTV Dhinakaran  THanks to Actor vijay 

 

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதனால் அவருக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

விஜய் மக்கள் இயக்கத்தின் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நடிகர் விஜய், விரைவில் முழுநேர அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதால், சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்களின் பிறந்தநாளுக்கு நடிகர் விஜயும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். 

அந்த வகையில், நடிகர் விஜய் இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தினகரன், தனது பிறந்தநாளில் வாழ்த்து கூறிய நடிகர் தளபதி விஜய்க்கு நன்றி என ட்விட் பதிவு செய்துள்ளார்.