பல நெருக்கடிகளை தாண்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற இவர்தான் காரணமாம்.! ஓப்பனாக கூறிய டிடிவி தினகரன்.!ttv-dhinakaran-talk-about-vetrivel-KLUEB4

அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்தநிலையில், திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் முறையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில் அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சைபலனின்றி நேற்று காலமானார். வெற்றிவேல் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், துணிச்சலின் இருப்பிடமாகவும்,தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த கழகத்தின் பொருளாளரும்,என் அருமை நண்பருமான வெற்றிவேல் நம்மை கலங்கவைத்து,சென்றுவிட்ட பெருந்துயரத்தோடு இந்த மடலை எழுதுகிறேன். நண்பர் வெற்றி இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என்மனம் நம்ப மறுக்கிறது.

அம்மா அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஏதுவாக 2015ல் தமது MLA பதவியைத் துறந்தார். அம்மா அவர்கள் வாகை சூடுவதற்கு உழைத்த தொண்டர் படையின் தளகர்த்தராக நின்று எந்த மனத்தயக்கமும் இல்லாமல் வெற்றி பணியாற்றினார்.அதுதான் வெற்றிவேல் எனும் விசுவாசத்தின் போற்றுதலுக்குரிய குணம்.

தமிழக வரலாறு பார்த்திராத அளவுக்கு அதிகாரத்தின் அத்தனை முனைகளின் வழியாகவும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை எல்லாம் தாண்டி 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் பெற்ற அசாத்தியமான வெற்றிக்கு முழுமுதற்காரணமே என் அருமை நண்பர் வெற்றிதான்! 

எதிரிகளும் துரோகிகளும் ஏற்படுத்துகிற தடைகளை உடைத்து தூள்,தூளாக்கி வெற்றி பெறும் சக்தியை வெற்றி போன்றவர்கள் நமக்குத்தந்திருக்கிறார்கள்.அந்த உணர்வு மாறாமல்,லட்சியப்பாதையில் இன்னும் பிடிப்போடும்,வேகத்தோடும் செயல்பட்டு வெற்றி பெறுவதே வெற்றிவேலுக்கு செலுத்துகிற உண்மையான அஞ்சலி

எதற்கும் அஞ்சாத லட்சோபலட்சம் வெற்றிவேல்கள் கட்டி எழுப்பிய பேரியக்கமிது.வெற்றிவேல் போன்ற தன்னலமில்லாத தளபதிகளால் போற்றி பாதுகாக்கப்படுகிற இயக்கமிது.அதனால் நாம் நிச்சயம் வெற்றிக்கோட்டையை எட்டிப்பிடிப்போம்!நம்முடைய வெற்றிவேல் போன்றோரின் தியாகமும் உழைப்பும் ஒரு நாளும் வீண்போகாது என டிடிவி தெரிவித்துள்ளார்.