இன்ஸ்டன்ட் கர்மா..! ஹீலியம் கேஸிடம் சிகிரெட்டால் வம்பு செய்த ரௌடி உடல் சிதறி உயிரிழப்பு.. திருச்சியில் நடுரோட்டில் சம்பவம்.!

இன்ஸ்டன்ட் கர்மா..! ஹீலியம் கேஸிடம் சிகிரெட்டால் வம்பு செய்த ரௌடி உடல் சிதறி உயிரிழப்பு.. திருச்சியில் நடுரோட்டில் சம்பவம்.!


Trichy Rowdy Died Helium Gas Cylinder Explodes

 

சிகிரெட் பற்றவைத்து மாமூல் வசூல் செய்த அடாவடி ரௌடி சிலிண்டர் வெடித்து உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே ஜவுளி மற்றும் தங்க நகைக்கடைகள் அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் தீபஒளி பண்டிகையையொட்டி மக்களின் கூட்டம் நேற்று அப்பகுதியில் அதிகளவில் காணப்பட்டது. 

பண்டிகை காலத்தினை முன்னிட்டு சிறு வியாபாரிகளும் தங்களின் விற்பனையை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சில்க்ஸ் அருகே இரவு 9 மணியளவில் பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உருக்குலைந்து போனது. ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் இருந்த ஹீலியம் பலூன் சிலிண்டர் வெடித்தது உறுதியாகவே, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்து இருந்த 2 சிறுவர்கள், 2 பெண்கள்  உட்பட 6 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி கேமிராவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 

trichy

இதன்பேரில் ஹீலியம் சிலிண்டர் பலூன் வெடித்தது உறுதியான நிலையில், வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் ஹீலியம் பலூன் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை கவனித்த கரூரை சேர்ந்த ரௌடி ரவிக்குமார் என்ற மாட்டு ரவி வடமாநில தொழிலாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டி இருக்கிறார். 

மேலும், அவர்கள் வைத்துள்ள சிலிண்டர் அருகே நின்றுகொண்டு புகைபிடித்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் ரௌடியை எச்சரித்தும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஹீலியம் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது என்பது அம்பலமானது. இந்த சம்பவத்தில் மாமூல் கேட்ட ரௌடி மாட்டு ரவி உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.