பள்ளிக்கூடமா? பார்க் ஆ?... என்னென்ன பண்ணிருக்கானுக பாருங்க.. ஆசிரியையும் - 2 ஆசிரியரும்..!

பள்ளிக்கூடமா? பார்க் ஆ?... என்னென்ன பண்ணிருக்கானுக பாருங்க.. ஆசிரியையும் - 2 ஆசிரியரும்..!


TRICHY MANNACHANALLUR GOVT SCHOOL TEACHER VIDEO

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், வடக்கு சித்தாம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறர்கள். இதே பள்ளியில் ரமேஷ் (வயது 40), புண்ணியமூர்த்தி (வயது 30) ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். 

இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆசிரியையுடன் மேல் சட்டை இன்றி அலுவலாக்கத்தில் பேசுவது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, பலரும் தங்களின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.  

பள்ளி தலைமை ஆசிரியருக்கு விஷயம் தெரியவந்து வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகைப்படம் எப்போது? எடுக்கப்பட்டது என்ற விசாரணையும் நடந்து வருகிறது.