13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
உதவி செய்வதாக நடித்து உபத்திரம்... மூதாட்டியை கடத்தி சென்று நடந்தேறிய பயங்கரம்.. திருச்சியில் அதிர்ச்சி.!!
பாட்டிக்கு உதவி செய்வது போல நடித்து செயின் பறித்த மர்ம நபர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நளினி வசந்தா (வயது 73). இவரின் மகன்கள் சென்னையில் இருக்கின்றனர். இந்த நிலையில், தனது வீட்டிலிருந்த மிக்ஸியை சரிசெய்ய அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி இருக்கின்றனர்.
இதனை நம்பிய மூதாட்டியும் அவர்களுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்ற நிலையில், சிறிது தூரம் சென்றதும் கயவர்கள் மூதாட்டியின் கழுத்தில் கத்தி வைத்து அவரிடம் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக மூதாட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.