பஜாஜ் பைனான்ஸ் அதிகாரிகளின் தொல்லையால், முதியவர் திருச்சி நீதிமன்ற வாயிலில் தீக்குளித்து தற்கொலை.! 

பஜாஜ் பைனான்ஸ் அதிகாரிகளின் தொல்லையால், முதியவர் திருச்சி நீதிமன்ற வாயிலில் தீக்குளித்து தற்கொலை.! 


Trichy Bajaj Finance Officials Torture Aged Old Man Suicide Died INfornt of Trichy Court

தனியார் பைனான்ஸ் ஊழியர்களின் அவதூறு பேச்சால் நீதிமன்ற வாசலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு நேற்று வந்த முதியவர், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அவரை அருகே இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, உடல் பாதி எரிந்த நிலையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் திருச்சி கண்டோமென்ட் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், திருச்சியில் உள்ள அண்ணாநகரில் வசித்து வரும் முதியவர் சேகரன் (வயது 58). இவர் திருச்சி - பழைய தஞ்சாவூர் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்கிறார். பஜாஜ் நிறுவனத்திடம் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பரில் ரூ.7 இலட்சம் கடன் பெற்றுள்ளார். 

trichy

கடன் தவணையாக ரூ.20,810 மாதாமாதம் செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதமாக கடன் தவணையை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லாத காரணத்தால் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்பது அம்பலமானது. 

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதி செய்யப்பட்ட முதியவர் சேகரன், 80 % தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.