பலத்த காயத்துடன் நகர முடியாமல் அவதிப்பட்ட நல்லபாம்பு.! பின் பரபரப்பாக நடந்த ஆச்சர்யத்தை பார்த்தீர்களா!!

பலத்த காயத்துடன் நகர முடியாமல் அவதிப்பட்ட நல்லபாம்பு.! பின் பரபரப்பாக நடந்த ஆச்சர்யத்தை பார்த்தீர்களா!!



treatment-given-to-snake-by-doctors

மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் நல்லபாம்பு ஒன்று உடலில் பலத்த காயங்களுடன் நகர முடியாமல் கிடந்துள்ளது. இந்நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிய அப்பாம்பை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து திருநகர் ஊர்வனம் அமைப்பிற்கு தகவல் அளித்துள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பாம்பை மீட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு மருத்துவர் பார்த்திபன் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழு பாம்பை பரிசோதித்து அதற்கு முதலுதவி அளித்தனர். அதனைத் தொடர்ந்து காயம் ஏற்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காக பாம்பிற்கு மயக்க மருந்து கொடுத்து 2 மணி நேரம் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 

madurai

மேலும் காயம் ஏற்பட்டிருந்த இடத்தில் தையல்போட்டு கட்டப்பட்டிருந்தது இதனை தொடர்ந்து பாம்பு நன்றாக ஊர்ந்து செல்கிறதா என மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொழுது மனிதர்களைப் பார்த்ததும் பாம்பு சீறதுவங்கியது. அதைத்தொடர்ந்து ஊர்வனம் அமைப்பினர் பாம்பை மீட்டு மதுரை சரக வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த நிலையில் பாம்பு காட்டு பகுதியில் விடப்பட்டது.