BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மது அருந்துவிட்டு பணிபுரியக் கூடாது.! மீறினால்... அரசு போக்குவரத்து கழகம் அதிரடி எச்சரிக்கை.!
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிபுரிந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும், மேலும் பயணிகளிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அண்மை காலமாக ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் மது அருந்தியநிலையில் பணிபுரிவதாக புகார்கள் எழுந்து வருகிறது. மது அருந்திவிட்டு பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். இதனால் பொதுமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் நம்பிக்கை குறைந்து பயணம் செய்வதை தவிர்க்க வாய்ப்புள்ளது.
எனவே மது அருந்திவிட்டு பணிபுரியக் கூடாது. அது கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.