சென்னையில் கஞ்சா கடத்திய வழக்கில் வழக்கறிஞர் கைது.! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!trainee-lawyer-arrested-in-case-of-smuggling-ganja-in-c

சென்னை ராயபுரம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் பயிற்சி வழக்கறிஞர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamilnadu

சென்னை ராயபுரம் என்டிஆர் பாலம் அருகே  காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோ ஒன்றை பிடித்து விசாரித்ததில் கஞ்சா  கடத்தியது தெரியவந்தது தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுனர் தர்மராஜ் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட  விசாரணையின் போது தர்மராஜ் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹைகோர்ட்டில் பயிற்சி வழக்கறிஞராக இருக்கும் பிரதீப் சரண்,ரஞ்சித் மற்றும் பிரவீன் தமிழரசன் உள்ளிட்டோரையே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.