ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை.! வீட்டுக்கு வந்த ஒரே போன் கால்.! பெருமூச்சு விட்ட பயணி.!train passenger missed jewels in train

தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை உயர்வால் நகை வாங்குவது என்பது பெரும் சவாலாக இருந்துவருகிறது. மேலும் நகையை பாதுகாப்பதும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த நகையை சக பயணி ஒருவர் போலீசார் மூலம் நகை உரிமையாளரிடம் நகையை ஒப்படைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.05 மணிக்கு வந்தடைந்தது.  அந்த ரயில் மாம்பலம் ரயில்நிலையத்திற்கு வந்தபோது, சோதனை செய்வதற்கு ரயிலில் ஏறிய ஆர்பிஎப் போலீசாரிடம், பயணி ஒருவர், தனது பையை தவறவிட்டு சென்று விட்டதாக சக பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்பிஎப் போலீசார் அந்த பையை எடுத்து மாம்பலம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 

train

அந்த பையில் பல நகைகள் இருந்துள்ளன. இதனையடுத்து அந்த பையில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, நெசப்பாக்கம் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்த பானு என்பவர் திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ரயிலில் சென்னை திரும்பியபோது, பையை தவறவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, தவறவிட்ட 40 சவரன் நகைகளை அவரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, அவர் ஆர்பிஎப் போலீசாருக்கும், சக பயணிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.