தமிழகம்

ஊரடங்கு நிறைவடைகிறதா.? குவிந்துவரும் ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் முன்பதிவுகள்!

Summary:

train and bus reservation started

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியதால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பாரத பிரதமர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தவுடனேயே, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கியிருந்து வேலை செய்து வந்த வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். 

திடீரென அனைவரும் ஓரே நேரத்தில் கிளம்பியதால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், ஊரடங்கு எப்போது முடியும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவு முடிந்து, ஏப்ரல் 15-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து திரும்பி சென்னை வருவதற்காக, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? அல்லது முடிவுக்கு வருமா? என்ற குழப்பத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இந்தநிலையில், டிக்கெட் முன்பதிவு 15-ந்தேதி மட்டும் அல்லாமல் 16, 17-ந்தேதிகளிலும் குவிந்து வருகிறது.


Advertisement