திருமணமான ஒரே வாரத்தில் புது மாப்பிள்ளைக்கு நிகழ்ந்த சோகம்: கதறிய மணமகளால் சோகத்தில் முழ்கிய கிராமம்..!tragic-incident-in-which-the-newlyweds-were-electrocute

திருப்பத்தூர் அருகே திருமணமான ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் அருகே உள்ள கதிரிமங்கலம் சி.கே. ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கார்த்திகேயன் (25). இவர் சொந்தமாக பேட்டரி கடை வைத்துள்ளார் கார்த்திகேயனுக்கு, அதே பகுதியில் வசித்து வரும் அவரது அக்கா மகள் ஸ்ரீப்ரியாவுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. மறுவீடு ஆழைப்பு முடிந்ததும் ரவியும் ஸ்ரீபிரியாவும் கார்த்திகேயனின் வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில், கார்த்திகேயன் கழிவறைக்கு செல்வதற்காக மின்விளக்கின் ஸ்விட்சை ஆன் செய்துள்ளார். அப்போது, சுவிட்ச் பாக்ஸ் இல் இருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயனை அவரது குடும்பத்தினர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த  திருப்பத்தூர் காவல் நிலைய காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்யாணமான ஓரு வாரத்தில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.