திருவண்ணாமலையில் சோகம்..! இரு சக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதி இளைஞர் பலி.!



Tragedy in Tiruvannamalai..! A cargo truck collided with a two-wheeler, killing a youth.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணக்கந்தல் கிராமத்தை சேர்ந்த பாலாஜி கோயம்புத்தூரில் விடுதியில் தங்கி டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி தீபாவளி பண்டிகையை தன் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடுவதற்காக கண்ணகந்தலில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாலாஜி உறவினர் வீட்டிற்கு தீபாவளி வாழ்த்து சொல்ல தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். 

பின்னர் பாலாஜி கொட்டகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரி அவரின் இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் பாலாஜி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். 

accident

இதனையடுத்து நிகழ்விடதிற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பாலாஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.