ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தலைமையாசிரியை .. காரணம் என்ன? காவல்துறை விசாரணை.!

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தலைமையாசிரியை .. காரணம் என்ன? காவல்துறை விசாரணை.!



tragedy-in-coimbatore-headmistress-commits-suicide-by-j

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு  பகுதியைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில்  தலைமையாசிரியை ஆக பணியாற்றி வந்தவர்  விஜயராணி (53). இவர்  பள்ளி அருகிலேயே வசித்து வந்தார். இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில்  கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் துடியலூர் ரயில் நிலையம் வந்த இவர்  வாகனத்தை நிறுத்தி விட்டு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார்.

tamilnadu

அப்போது  மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டார்‌. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த  தற்கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamilnadu

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக  காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது தற்கொலை அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவரது இரு மகள்களும் விஜய ராணியின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.