கார் ஓட்டி பழகும் போது நேர்ந்த விபரீதம்... சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதி பலியான சம்பவம்.. நெஞ்சை அதிர வைக்கும் காட்சிகள்..!

கார் ஓட்டி பழகும் போது நேர்ந்த விபரீதம்... சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதி பலியான சம்பவம்.. நெஞ்சை அதிர வைக்கும் காட்சிகள்..!


Tragedy happened while driving a car... A boy on a bicycle was hit by a car and killed.. Heart-pounding scenes..!

கோவை போத்தனூர் அருகே கார் ஓட்டி பழகும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் சைக்கிள் சென்ற சிறுவன் மீது மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் இறைச்சி கடைக்காரரான பாஷித். இவருக்கு ரைஃபுதீன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் ரைஃபுதீன் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் கார் ஓட்டி பழகிக் கொண்டிருந்த முகமது என்பவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த சிறுவன் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

boy

ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்திற்கு காரணமான சையது முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.