நண்பர்களுடன் டீ குடிக்க சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!Tragedy happened to a person who went to drink tea with his friends.. The family is in shock..!

தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு முத்துலட்சுமணன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது டீ குடித்தவாறு அங்கிருந்த மின்கம்பத்தில் முத்துலட்சுமணன் சாய்ந்துள்ளார். அந்த கம்பத்தில் மின் கசிவு இருந்ததை அறியாத முத்துலட்சுமணன் சாய்ந்தவுடன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

young man

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் முத்துலட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.