குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை.. இன்றை விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?

குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை.. இன்றை விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?



Today's gold rate

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே போவதால் நாட்டின் பல பகுதிகளில் இன்றும் லாக்-டவுன் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் எளிய மக்கள் முதல் அனைத்து நிலையினரும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் மக்களின் பொருளாதாரம் பின்னோக்கி செல்லக்கூடிய நிலையில் உள்ளது.

ஆனால் தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தவரையில் எங்களுக்கு எந்த லாக்-டவுனும் இல்லை என்பது போல் நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

gold rate

இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.இன்று காலை பவுனுக்கு 360 ரூபாய் குறைந்து 39,584 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.ஒரு கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 4,948 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 18 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு  3,776 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை 20 காசு குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது.