#Breaking: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்வு.. இன்று தங்கம் வெள்ளி விலை இதோ.!



today-gold-price-chennai-24-jan-2025

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது. 

ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதனால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. 

Latest news

இன்று தங்கம் விலை

இன்று சென்னையில் கிராம் தங்கம் ரூ.7555 க்கும், சவரன் தங்கம் ரூ.60,400 க்கும் விற்கப்படுகிறது. நேற்றைவிட தங்கம் சவரனுக்கு ரூ.240ம், கிராமுக்கு ரூ.30ம் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ரூ.1000 கிலோவுக்கு உயர்ந்து, இன்று வெள்ளி கிலோ ரூபாய் 1,05,000 க்கு விற்கப்படுகிறது.