வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
Breaking; செந்தில் பாலாஜியை சந்திக்க.... ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செல்ல உள்ள மு க ஸ்டாலின்...!! தகவல்..!!
அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.
அதன் பின்னர், செந்தில் பாலாஜி விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக அவரது வீட்டில் இருந்து அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓமந்தூர் மருத்துவமனையில் 6-வது மாடியிலுள்ள ஐசியூ வார்டில் ணன்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து உதயநிதி ஸ்டாலின் போன்ற அமைச்சர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவமனை சென்ற அமைச்சர்கள் செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சி.ஆர்.பி.எப். வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.