AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
மகிழ்ச்சி செய்தி! 4 மாதங்களுக்கு ரூ.500 கட்டணம் இல்லை....! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் வணிகர்களுக்கு உதவும் வகையில் வணிகர் நல வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிரந்தர உறுப்பினர் சேர்க்கையை ஊக்குவிக்கும் இந்த முடிவு மாநிலம் முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிரந்தர உறுப்பினர் கட்டண தளர்வு நீட்டிப்பு
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா நிரந்தர உறுப்பினர் சேர்க்கைகான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 2026 மார்ச் 31 வரை உறுப்பினர் ஆக 500 ரூபாய் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?
யார் விண்ணப்பிக்கலாம்?
இதற்காக GST சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற வணிகர்கள், அதேபோல் பதிவு செய்யாதவர்களாக இருந்தாலும் வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை (Turn Over) செய்யும் வியாபாரிகளும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வு சிறு வணிகர் சமூகத்துக்கு பெரிய ஊக்கமாக கருதப்படுகிறது.
வணிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
நிரந்தர உறுப்பினர் சேர்க்கை கட்டணம் நீக்கப்பட்டிருப்பது மூலம் மேலும் பல வணிகர்கள் வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்களில் இணைந்து பயன் பெற முடியும். இது மாநிலத்தின் வணிகத்துறைக்கு உற்சாகமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நீட்டிப்பு, வரவிருக்கும் ஆண்டுகளில் வணிகர்களுக்கு கூடுதல் நலன்களை வழங்கும் வகையில் Tamil Nadu Traders Welfare செயல்பாடுகளை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.