அடிசக்க.. பள்ளி மாணவர்களுக்கு நீடிக்கப்படுகிறதா காலாண்டு விடுமுறை?..  ஜாலியோ ஜிம்கானா தகவல் உற்சாகத்தில் மாணவர்கள்.!

அடிசக்க.. பள்ளி மாணவர்களுக்கு நீடிக்கப்படுகிறதா காலாண்டு விடுமுறை?..  ஜாலியோ ஜிம்கானா தகவல் உற்சாகத்தில் மாணவர்கள்.!


TN School Students Quarter Exam Holiday

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எழுத்து பயிற்சி இருப்பதால் காலாண்டு விடுமுறை தேதிகளில் தொடக்கப்பள்ளிகளுக்கு மாற்றம் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டு வேலைநாட்கள், விடுமுறை அட்டவணை தொகுப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21 ஆம் தேதி முதல் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விடுமுறையாக அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அறிவிக்கப்படும். 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

tamilnadu

இந்த நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எழுத்து பயிற்சி அக் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 6-ம் வகுப்பு முதல் வழக்கம்போல 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியாகலாம்.