அரசியல் தமிழகம் TN Election 2021

அதிமுகவினர் இப்படி செய்வது அரசியல் தற்கொலைக்கு சமம்.. அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி..

Summary:

அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைவது அரசியல் தற்கொலைக்கு சமம் என விமர்சித்துள்

அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைவது அரசியல் தற்கொலைக்கு சமம் என விமர்சித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதி, தேர்தல் பிரச்சாரம் என விறுவிறுப்பாக செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக காட்சிகள் உட்பட பல தரப்பினரும் தங்களுக்கு சீட் கிடைக்காத விரக்தியில், தாங்கள் இருக்கும் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைவது என்பது அரசியல் தற்கொலைக்கு சமம் என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறப்பில்லை, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இருமுனை, மும்முனை என எத்தனை முனை போட்டி வந்தாலும் அதிமுக அமோக கூட்டணிதான் அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.


Advertisement