
Summary:
தமிழகத்திலும் அமலாகிறது ஊரடங்கு கட்டுப்பாடுகள்?.. தமிழக முதல்வர் ஆலோசனை.!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தாலும், உருமாறியுள்ள ஓமிக்ரான் வகை அச்சம் ஏற்பட தொடங்கியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் பல்வேறு மாநிலமும் ஓமிக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ள தொடங்கிவிட்டது.
இந்நிலையில், வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுகள் நீடிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, இன்று தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் காலை 10.30 மணியளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்ததும் மாலை அல்லது நாளை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement