தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
15 வயது சிறுமியின் உயிரை பறித்த கட்டிடம்; கும்பாவிஷேக நிகழ்வில் சோகம்.. மனமுடைந்த முதல்வர்..! இழப்பீடு வழங்கி உத்தரவு..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, மருதத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலில் இன்று காலை கும்பாவிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது, கோவிலுக்கு அருகேயிருந்த கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய ஸ்ரீமுஷ்ணம் காவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மகள் சுந்தந்திர தேவி (வயது 15) என்ற சிறுமி படுகாயம் அடைந்தார்.
அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு முதல்வர் தனது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில், தேவியின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருக்கிறார்.