நடுரோட்டில் ஜாதியைச்சொல்லி அப்பாவி குடும்பம் மீது கொடூர தாக்குதல்; 3 காவலர்கள் பணியிடைநீக்கம்.. பதைபதைப்பு வீடியோ உள்ளே.!

நடுரோட்டில் ஜாதியைச்சொல்லி அப்பாவி குடும்பம் மீது கொடூர தாக்குதல்; 3 காவலர்கள் பணியிடைநீக்கம்.. பதைபதைப்பு வீடியோ உள்ளே.!



Tiruvannamalai Chengam Cops Beaten Family members on 2016 Now They Suspend by Court Order 


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜா. இவரின் மனைவி மற்றும் மகனுடன், கடந்த 2016ம் ஆண்டு செங்கம் நகரின் பிரதான சாலையில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். 

அப்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்து சண்டையிட்ட நிலையில், அங்கு வந்த காவலர்கள் இவர்களை சமூகப்பெயரை சொல்லி, அங்கிருந்து செல்லக்கூறி கடுமையான தாக்குதல் நடத்தினர். 

காவல் உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார், விஜயகுமார் ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் தாக்குதலை தாங்க இயலாத பெண்மணி, தனது கணவர் மற்றும் மகன் தாக்கப்படுவதை கண்டு அலறியது அங்கிருந்தோரை பதைபதைக்க செய்தது.  

இந்த சம்பவம் தொடர்பாக ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, விசாரணை செய்த நீதிபதிகள் தற்போது சம்பந்தப்பட்ட 3 காவலர்களின் மீது வழக்குப்பதியாத செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மூவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கமாறும், அதனை மூன்று காவலர்களிடம் இருந்தே வசூல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை முடியும் வரையில் மூவரையும் பணியிடைநீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.