இறந்தும் 3 பேரின் உடல்களில் வாழும் இராணுவ வீரரின் மனைவி.. உடல் உறுப்பு தானத்தால் நெகிழ்ச்சி செயல்.!

இறந்தும் 3 பேரின் உடல்களில் வாழும் இராணுவ வீரரின் மனைவி.. உடல் உறுப்பு தானத்தால் நெகிழ்ச்சி செயல்.!


Tiruvannamalai Army Officer Wife Brain Dead Organ Donation

 

மூளைச்சாவு அடைந்த இராணுவ வீரருடைய மனைவியின் உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். செந்தில் குமாரின் மனைவி சத்யா (வயது 37). 

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாது இருந்த சத்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவரின் உறவினர்கள் உடலுறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். 

Tiruvannamalai

இதுகுறித்த தகவலை மருத்துவர்களிடம் தெரிவிக்கவே, கணவரின் ஒப்புதல் பெறப்பட்டு சத்யாவின் கல்லீரல், கிட்னி, கண்கள் போன்றவை தானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இவை சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொறுத்த அனுப்பி வைக்கப்பட்டன. இராணுவ வீரர் தன்னலமற்று நாட்டிற்கு பணியாற்றி வருகிறார். 

அவரின் மனைவியும் இறந்த பின்னரும் 3 உயிர்களை காப்பாற்ற வழிவகை செய்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.