சிகிரெட் அடித்து மாணவிகளிடம் சீன் போட்டு சிக்கிய மாணவர்கள்: கண்டித்த ஆசிரியர்கள் பணியிடைநீக்கம், பணியிடமாற்றம்.!Tiruvannamalai Arani Sevur Govt School Teachers Suspend Transfer 

 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி, சேவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் சிகரெட் புகைத்து இருக்கிறார். 

மேலும், பள்ளியில் பயின்று வரும் பெண்களின் முகத்தில் அதனை விட்டு கிண்டல் செய்தும் வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறி இருக்கின்றனர். 

அவர்கள் பள்ளிக்கு விரைந்து ஆசிரியரிடம் புகார் அளிக்கவே, பணியில் இருந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்து இருக்கின்றனர். 

இந்நிலையில், மாணவர்களுக்கு திடீரென உட்காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி, ஆரணி அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதித்த பெற்றோர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். 

மாணவர்களை ஆசிரியர் கடுமையாக தாக்கியதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குருமூர்த்தி, பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளிடம் கருத்து கேட்டதாக தெரிய வருகிறது. 

இதனைத்தொடர்ந்து, ஆசிரியர்கள் திலீப்குமார், வெங்கடேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நித்தியானந்தம் என்ற ஆசிரியர் கேளூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், பாண்டியன் முள்ளண்டிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளனர்.