கள்ளக்காதலை கைவிட வற்புறுத்திய கணவர் கொலை; கணவருக்கு பதறவைக்கும் துரோகம்., பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது.!Tiruvannamalai Arani Man Killed by Wife Affair Issue

 

ஓய்வுபெற்ற இராணுவ வீரரின் மனைவி கள்ளகாதலுக்காக தனது கணவரின் உயிரை பறித்த கொடூரம் நடந்துள்ளது. இதில், கள்ளக்காதல் ஜோடிகளுக்கு உதவியதாக பாஜக பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, விஏகே நகரில் வசித்து வருபவர் வெற்றிவேல் (வயது 42). இவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். வெற்றிவேலின் மனைவி ரேவதி (வயது 32). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி வெற்றிவேல் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது உயிரிழந்தது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக ஆரணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வெற்றிவேல் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, ரேவதியிடம் வாக்குமூலம் பெட்ரா அதிகாரிகள், அவரின் கள்ளகாதலனான ஆரணியை அடுத்த காமக்கூர்பாளையம் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், "வெற்றிவேல் புதிதாக வீடுகட்டி வந்த நிலையில், அப்பணியை வெற்றிவேலின் தங்கை கணவர் நாகராஜ் கவனித்து வந்துள்ளார். 

அப்போது, நிகழ்விடத்தில் இருந்த ரேவதிக்கும் - நாகராஜுக்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் வெற்றிவேலுக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்து இருக்கிறார். இதனை கண்டுகொள்ளாத கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருக்க, கடந்த ஆண்டில் வெற்றிவேல் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் கள்ளக்காதலை கைவிடும்படி ரேவதியை அடித்துள்ளார். 

Tiruvannamalai

இதனால் கோபித்துக்கொண்டு ரேவதி குழந்தைகளோடு தாயின் வீட்டிற்கு சென்ற நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 4ம் தேதி இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து இருந்த வெற்றிவேலை சந்தித்த ரேவதி தான் திருந்திவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். 

கடந்த 5ம் தேதி வெற்றிவேலை வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், ரேவதி மருந்தோடு தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து இருக்கிறார். பின்னர், நள்ளிரவில் கள்ளக்காதலன் நாகராஜ், பாஜக பிரமுகர் ராஜேஷ் மற்றும் ரேவதி சேர்ந்து வெற்றிவேலின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைதான கள்ளக்காதல் ஜோடி உட்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.