தீ விபத்தில் சிக்கி கணவர் கண்முன் உயிரிழந்த மனைவி; தமிழ்நாடு தீயணைப்பு அதிகாரி வீட்டில், மண்ணெணெய் அடுப்பால் நடந்த சோகம்.!Tiruvannamalai Arani Fire Department Officer Wife Vijayalatsumi Died Officer Saravanan Injury Kerosene Stove Explodes 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, அருணகிரிசத்திரம் கிராமம், கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் தீயணைப்புத்துறையில் துணை அலுவலராக வேலை பார்க்கிறார். சரவணனின் மனைவி ஜெயலட்சுமி. 

இன்று ஜெயலட்சுமி சமைக்க மண்ணெண்ணெய் அடுப்பை தயார் செய்ய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 

இந்த தீ விபத்தில் ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துவிட, அவரை காப்பாற்ற முயற்சித்த சரவணன் படுகாயம் அடைந்தார். 

Tiruvannamalai

File Pic

வீட்டில் இருந்து கரும்புகை மற்றும் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயணைப்பு வீரரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆரணி காவல் துறையினர் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.