கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
#Breaking: அரசுப்பள்ளி வகுப்பறையில் மனிதக்கழிவு வீச்சு; பல்லடத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளியின் வகுப்பறையில் மலம் வீசி செல்லப்பட்ட சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், காமநாயக்கன்பாளையம் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம்போல பள்ளி திறக்கப்பட நிலையில், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 10 ம் வகுப்பு அறையில், மனித மலம் வீசப்பட்டு இருந்துள்ளது.
இதையும் படிங்க: போதையில் தந்தை அடித்துக்கொலை; மனைவி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்.. நடந்தது என்ன?
மனிதக்கழிவு வீச்சு
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பல்லடத்தில் அரசு பள்ளிக்குள் மனித மலம் வீச்சு pic.twitter.com/1GGFfDpAK6
— kalyanvarma976 (@kalyanvarm99877) January 29, 2025
இந்த விஷயம்குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மனித மலம் வீசியது மாணவர்களோ? வெளி நபர்களோ? என விசாரணை நடந்து வருகிறது.
சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வரும் பள்ளியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சம்பந்தப்பட்ட வகுப்பறையை தூய்மை பணியாளர்கள் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன.
இதையும் படிங்க: தோசை சாப்பிட்ட லாரி ஓட்டுநர் வாயில் நுரைதள்ளி மரணம்; தாய், காதலியின் சதிவலை.. பகீர் தந்த வாக்குமூலம்.!